TGViewer
Channel Public Channel
Telegram Info தமிழ்

Telegram Info தமிழ்

@tginfota

டெலிகிராம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.

கூடுதல் தகவலுக்கு @betainfota
Subscribers
162
Photos
45
Videos
7
Links
132

Showing posts older than #162 · Back to latest

Older Posts 20 shown
Post #161 709
Telegram Info தமிழ் குழுக்கள் மற்றும் பதிதடங்கள் மூலம் பதிலடி தற்போது, உமது குழுக்கள் மற்றும் பதிதடங்களின் சார்பாக நீங்கள் தகவல்களை அனுப்பலாம், ஆனால் உங்கள் உமது உமது தனிப்பட்ட கணக்கின் மூலமாகவே இருக்கும். டெலிகிராமின் வரவிருக்கும் பதிப்பில், உங்கள் குழுக்கள் மற்றும் பதிதடங்கள்…
கடைசிப் பத்தியைப் புதுப்பித்துள்ளோம்.

ஒரு பயனர் தரும் பதிலடிகளின் எண்ணிக்கை மாறவில்லை (வழக்கமான பயனருக்கு ஒன்று, மிகைப்புப் பயனருக்கு மூன்று வரை), ஆனால் புதிய செயல்பாடுகள் வெவ்வேறு அவதாரங்களாகப் பதிலடிகளை நீங்கள் எவ்வாறு கலக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.
Telegram Telegram Info தமிழ் குழுக்கள் மற்றும் பதிதடங்கள் மூலம் பதிலடி தற்போது, உமது குழுக்கள் மற்றும் பதிதடங்களின் சார்பாக நீங்கள் தகவல்களை அனுப்பலாம், ஆனால் உங்கள் உமது உமது தனிப்பட்ட கணக்கின் மூலமாகவே இருக்கும். டெலிகிராமின் வரவிருக்கும் பதிப்பில், உங்கள் குழுக்கள் மற்றும் பதிதடங்கள்…
Post #160 478
மொன்டானா ஆளுனர் டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகச் செயலிகளை அரசு சாதனங்களில் இருந்து தடை செய்தார்

மொன்டானா ஆளுநர் கிரெக் ஜியான்ஃபோர்டே (Greg Gianforte) டெலிகிராம், வீசாட் மற்றும் டெமு உள்ளிட்ட பல சமூக ஊடகச் செயலிகளை அரசு சாதனங்களில் இருந்து தடை செய்தார். தடையானது வெளிநாட்டு எதிரிகளுடன், குறிப்பாக சீனாவுடன் தொடர்புடையச் செயலிகளைக் குறிவைக்கிறது. கவர்னர் ஜியான்ஃபோர்டே தரவு பாதுகாப்பு மற்றும் தனிமறைவு குறித்த கவலைகளை வெளிப்படுத்தினார் மேலும் பயனர்களைக் கண்காணிக்கவும் தனிப்பட்ட தகவல்களை அணுகவும் இந்தச் செயலிகள் பயன்படுத்தப்படலாம் என்று பரிந்துரைத்தார்.

டிக்டாக்கிற்கும் மாநிலம் முழுவதும் செயல்பட தடை விதிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புத் தொடர்பான எந்த அமெரிக்கத் தரவுகளும் சீன அரசாங்கத்துடன் பகிரப்படவில்லை அல்லது கோரப்படவில்லை என்று டிக்டாக் வலியுறுத்துகிறது.

ஜியான்ஃபோர்டேன் முடிவு, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள இது அரசு வழங்கிய சாதனங்கள் மற்றும் மாநிலத்துடன் வணிகம் செய்யும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு பொருந்தும். இது பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சமநிலைப்படுத்துவது மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பது பற்றிய பரிசீலனைகளை எழுப்புகிறது. டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகப் செயலிகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கையானது, வெளிநாட்டு எதிரிகளுடன், குறிப்பாக சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ள செயலிகளுடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் பற்றிய வளர்ந்து வரும் கவலைகளைப் பிரதிபலிக்கிறது.

#ஐகᣞகᒉயஅᘏமரᒉகᣞகп #தതட
The Verge Montana bans Telegram, WeChat, and Temu from government devices The policy goes into effect on June 1st.
  • 👍 1
Post #159 344
குழுக்கள் மற்றும் பதிதடங்கள் மூலம் பதிலடி

தற்போது, உமது குழுக்கள் மற்றும் பதிதடங்களின் சார்பாக நீங்கள் தகவல்களை அனுப்பலாம், ஆனால் உங்கள் உமது உமது தனிப்பட்ட கணக்கின் மூலமாகவே இருக்கும்.

டெலிகிராமின் வரவிருக்கும் பதிப்பில், உங்கள் குழுக்கள் மற்றும் பதிதடங்கள் மூலமாகவும் நீங்கள் பதிலடி தரலாம்.

டெலிகிராமின் ஆவணங்களில் உள்ள மாற்றங்களின்படி, பதிலடிக்க தெரிவுசெய்த உமது குழு அல்லது பதிதடத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட பதிலயுடன் ஒரே ஒருமுறை மட்டுமே பதிலடிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
  • 👍 1
Post #158 567
மேக்ஓஎஸ்ஸுக்கான டெலிகிராமில் உள்ள முக்கியமான பாதிப்பு பயனர் தனிமறைவை ஆபத்தில் ஆழ்த்துகிறது

மேக்ஓஎஸ்ஸுக்கான டெலிகிராமில் உள்ள முக்கியமான பாதிப்புத் தொடர்பான அண்மை வளர்ச்சி பற்றி தகவலிடும் தளத்தின் குழு இந்தச் சிக்கலுக்கு பதிலளித்துள்ளது. மேலும், பாதிப்பைக் கண்டறிந்த கூகுள் பொறியாளர் எழுப்பிய கவலைகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 2023 இல் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த கூகுள் பொறியாளர் மாட் ஜான்சன், இது பயனர்களின் தனிமறைவுக்கு ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்து உடனடியாக டெலிகிராமுக்கு இந்தச் சிக்கலைப் புகாரளித்தார். பொறியாளரின் முயற்சிகள் மற்றும் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிப்பு கவனிக்கப்படாமல் இருந்தது.

பாதிப்பைச் சுற்றியுள்ள கவலைகள், விழிப்புணர்வு மற்றும் டெலிகிராமின் பாதுகாப்பு சேவையின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ட்விட்டரில் மாட் தகவலைப் பகிர்ந்தார்.

இந்த வெளிப்பாடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, டெலிகிராமின் குழு அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. வேர் அணுகலைப் பெற்ற தீம்பொருளுடன் சமரசமான மேக்கின் ஆப் ஸ்டோர் செயலியின் பயனர்களை மட்டுமே அப்பாதிப்பு பாதித்தது என்று அவர்கள் விளக்கினர். டெலிகிராம் பயனர்களுக்குப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் மேம்படுத்தல் ஆப்பிள் மதிப்பாய்வில் இருப்பதாக உறுதியளித்தது. டெலிகிராம் இணையதளத்தில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டச் செயலிகள் பாதுகாப்புக் குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை என உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கு டெலிகிராம் தங்களின் விருப்பமானத் தடத்தை வலியுறுத்தியது அதாவது "டெலிகிராம் தற்போது மூன்றாம் தரப்பு தளங்களில் பிழை அறிக்கைகளைக் கண்காணிக்கவில்லை மேலும் அனைத்து சமர்ப்பிப்புகளும் நேரடியாக security@telegram.org -க்கு அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது."

மேலும் விரிவான மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் இந்த அறிக்கையில் கிடைக்கின்றன.
X (formerly Twitter) Matt Johansen (@mattjay) on X 🚨 A new vulnerability found in Telegram that can grant access to your camera and microphone. Found by an engineer at Google, reported to Telegram and they haven't addressed it. So now we get a detailed public disclosure! How this works and what it means…
Post #157 433
பிரேசில் "பேச்சு சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்" சட்டத்தை இயற்றுகிறது

டெலிகிராம் மூலம் "மக்களாட்சியின் மீதான தாக்குதல்" என்று முத்திரை குத்தப்பட்ட PL 2630/2020 மசோதா, பிரேசிலிய அரசாங்கத்திற்கு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இணையத்தில் உள்ள தரவு உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்யும் உரிமையை வழங்குகிறது. பிரேசில் வரலாற்றில் மனித உரிமைகளுக்கு எதிரான மிக ஆபத்தான முடிவுகளில் ஒன்றாக இது அறியப்படுகிறது.

கூகுள், மெட்டா மற்றும் பிற நிறுவனங்கள் பிரேசிலிய காங்கிரசுக்கு ஏன் மசோதா மீண்டும் எழுதப்பட வேண்டும் என்பதைப் புரிய வைக்கும் வகையில் ஒன்றிணையத் திட்டமிட்டுள்ளன.

டெலிகிராம் பிரேசிலியர்களை அவர்களின் காங்கிரஸ் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு "பிரேசிலியர்கள் சுதந்திரமான இணையம் மற்றும் சுதந்திரமான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள்" என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறது.

மசோதா நிறைவேற்றப்பட்டால், டெலிகிராம் போன்ற தளங்கள் பிரேசிலில் சேவை செய்வதை நிறுத்த வேண்டியிருக்கும்.

@tginfobr இல் பிரேசில் பற்றி மேலும் காணலாம் .

#பᒉⵛரசᒉலᣞ
Post #156 394
உக்ரேனியர்களுக்கு டெலிகிராம் ஆபத்தானது என விவரிக்கும் கட்டுரைக்குப் பதிலளித்தது

டெலிகிராமை குறிவைத்த ஒன்பது விடயங்களின் விமர்சனம் டெலிகிராமின் அதிகாரப்பூர்வ பதிலின் படி:

• டெலிகிராம் FSB உடனோ அல்லது ரஷ்யாவில் உள்ள வேறு எந்த அதிகாரிகளிடமோ எந்தத் தரவையும் வெளியிடவில்லை; பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவில்லை.
• டெலிகிராம் பொதுப் பணமாக்குதல் உத்தியைக் கொண்டுள்ளது மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை உயர்த்தியுள்ளது.
• பாவெல் துரோவ் ஒரு ரஷ்ய தொழிலதிபர் அல்ல, மாறாக பாதி உக்ரேனியர்.
• டெலிகிராம் நவல்னியைத் தடுக்கவில்லை, மேலும் கூகுள் மற்றும் ஆப்பிளின் அழுத்தத்தின் கீழ் திறன்மிகு வாக்களிப்பை மூன்று நாட்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தியது.
• நோவாய காஸிடவுக்கு பாவெல் துரோவ் எழுதிய கடிதம் போலி எனக் சந்தேகிக்கப்படுகிறது.
• ஜெர்மனியில் டெலிகிராம் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர்களின் தரவைப் பகிரவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூட, அதிகாரிகள் கோரிய தரவுகளை டெலிகிராம் வழங்கவில்லை.

@tginfouk -இல் உக்ரேனிய மொழியில் டெலிகிராம் தகவல்களைக் காணலாம்.
Post #155 246
டெலிகிராம் குற்றம் சாட்டப்பட்ட நாள் வரை அதற்கு விடப்பட்டக் கோரிக்கை பற்றி தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறது

பிரேசில் நீதி அமைச்சர் ஃபிளேவியோ டினோ பரப்பிய கூற்றுகளுக்கு மாறாக, சேனாகனின் (SENACON) கோரிக்கையை அனுப்பிய நாளின் அடுத்த வேலை நாளில் டெலிகிராம் பதிலளித்தது என்று பிரேசிலில் உள்ள அதன் அதிகாரப்பூர்வ பதிதடம் தகவல் வெளியிட்டது. மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல், டெலிகிராம் "பதிலளிக்கவில்லை" என்று குற்றம் சாட்டப்படும் நாள் வரை கோரிக்கை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மேலும், சேனாகன் வழங்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்பையும் டெலிகிராம் பகிர்ந்துள்ளது, ஆனால் அதே நேரத்தில், இது மற்ற தளங்களில் டெலிகிராம் தெரிவிக்கவில்லை எனக் காட்டுகிறது.

#பᒉⵛரசᒉலᣞ #தതட
Telegram Telegram Brasil Ao contrário das afirmações espalhadas pelo Ministro da Justiça Flávio Dino, o Telegram respondeu à solicitação da SENACON um dia útil após o envio. Diferente de outras empresas, o Telegram não foi informado sobre a solicitação até o dia que foi culpado de…
Post #154 263
பிரேசிலிய நீதிமன்றம் டெலிகிராம் மீதான தடையை ஓரளவு நீக்கியதாகக் கூறப்படுகிறது

கூட்டாட்சி நீதிபதியின் கூற்றுப்படி, முழுமையான டெலிகிராம் தடையானது பேச்சு சுதந்திரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் தடைக்கு ஆதரவாக செய்யப்பட்ட காவல்துறை விசாரணையுடன் திறம்பட தொடர்புடையது அல்ல.

இதைப் பொருட்படுத்தாமல் அபராதம் அமுல்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

#பᒉⵛரசᒉலᣞ #தതட
Post #153 375
பிரேசிலில் டெலிகிராம் தடை பற்றி பாவெல் துரோவ்

டெலிகிராமின் நோக்கம் "உலகம் முழுவதும் தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும்" என்று பாவெல் துரோவ் அண்மையில் தனது பதிதடத்தில் நினைவு கூர்ந்தார்.

துரோவின் கூற்றுப்படி, டெலிகிராம் எந்த நாட்டில் இயங்கினாலும், தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. உள்ளூர் சட்டங்கள் இக்கொள்கைகளுக்கு முரணாக இருக்கும்போது, டெலிகிராம் சந்தையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உதாரணமாக, மனித உரிமைகள் பிரச்சினையில் அதன் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாக சீனா, ஈரான் மற்றும் ரஷ்யாவில் முன்னதாக டெலிகிராம் தடைசெய்யப்பட்டது.

தொழில்நுட்ப ரீதியாக டெலிகிராம் வழங்க முடியாத தரவுகளை பிரேசிலில் உள்ள நீதிமன்றம் கோரியுள்ளது, மேலும் நிறுவனம் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. எவ்வளவு செலவானாலும், டெலிகிராம் பிரேசிலில் உள்ள தனது பயனர்களின் நலன்களையும், தனிப்பட்ட தகவல்தொடர்புக்கான அவர்களின் உரிமையையும் பாதுகாக்கும் என்றும் துரோவ் குறிப்பிட்டார்.

#பᒉⵛரசᒉலᣞ
  • 👍 1
Post #152 993
இந்தியாவில் டெலிகிராம் மிகைப்பின் விலை குறைந்துள்ளது

இந்திய பயனர்களுக்கான மின்அஞ்சல் பட்டியலில், டெலிகிராம் மிகைப்பு சந்தாவை மிகவும் மலிவு விலையில் உருவாக்குவதாக டெலிகிராம் கூறியது. இந்தியாவில் மாதாந்திர சந்தா இப்போது 179 இந்திய ரூபாய்கள் (2.2 அமெரிக்க டாலர்கள்) - இதற்கு முன்பு 469 இந்திய ரூபாய்கள் (5.74 அமெரிக்க டாலர்கள்) ஆகும்.

டெலிகிராமின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. டேட்ட.ஏஐ (data.ai) பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, டெலிகிராம் நாட்டில் 12 கோடி செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது, இது வட்ஸ்ஆப்பிற்கு அடுத்தபடியாக உள்ளது.

டெலிகிராம் தகவல், பல இந்திய பதிதடங்களைக் கொண்டுள்ளது:
— இந்தி @tginfohi
— மலையாளம் @tginfoml
- பெங்காலி @tginfobn
— தமிழ் @tginfota
— கன்னடம் @tginfokn

இவற்றுள் தன்னார்வத் தொண்டு செய்யக்கூடிய மேற்கண்ட மொழியில் ஏதேனும் ஒன்றை தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தேடுகிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், @infowritebot -இல் எங்களுக்கு எழுதவும்.
TechCrunch Telegram cuts subscription price by more than half in India | TechCrunch Telegram has cut the monthly subscription fee for its premium tier by more than half in India, where it has over 120 million active users.
  • 👍 1
Post #151 2.25K
டெலிகிராம் பதிதடங்களின் பொதுப்பெயர் பறிக்கப்பட்டதை மீட்டெடுக்க மனு

ஆகஸ்ட் 19 அன்று, டெலிகிராம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானப் பதிதடங்களின் பொதுப்பெயர்களை அவற்றின் உரிமையாளர்களை எச்சரிக்காமல் பறித்துக் கொண்டது.

அப்பதிதடங்கள் பெரும்பாலும் தனிப்பட்டத் தொகுப்புகள், பொதுக் காப்பகங்கள் மற்றும் கோப்பகங்களாகப் பயன்படுத்தப்பட்டன, அவை அடிக்கடி உள்ளடக்கத்தை இடுகையிட வேண்டிய அவசியமில்லை.

இச்செயல்முறை பலரை வருத்தப்படுத்தியது மற்றும் டெலிகிராமிலேயே நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வந்தது. பதிதட உரிமையாளர்களுக்கு முன் எச்சரிக்கை இல்லாமல் இதுபோன்ற செயல்களால் டெலிகிராமை எந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்த முடியாமல் பலர் நம்பிக்கையற்று உள்ளனர்.

டெலிகிராம் தகவல் ஆசிரியர் குழு, @tginfo & அதன் சர்வதேச தன்னார்வலர்கள் குழுவினர் டெலிகிராமைப் பின்வருமாறு கோருகின்றனர்:

• பறிமுதல் செய்யப்பட்ட பொது முகவரிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி அனுப்பவும்.
• இதுபோன்ற செயல்களைப் பற்றி செயலற்ற பதிதடங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கவும்.
• ஆபத்தில் இருக்கக்கூடிய பொதுப் பெயர்களைப் பெற பயனர்களை அனுமதிக்கவும்.

நீங்கள் மனுவில் பங்கேற்க விரும்பினால், கீழே ஒரு 👍 பதிலடி மூலமம் இதை உங்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்தும் வெளிப்படுத்தவும். டெலிகிராமில் உள்ள பெரும்பாலான பயனர்கள் இந்த செயலுக்கு எதிரானவர்கள் என்று சொல்ல இதுவே ஒரே வழி.

அல்லது டெலிகிராமின் இச்செயல் நியாயமானது என்று நீங்கள் நினைத்தால் 👎 பதிலடி மூலமம், அதன் நன்மைகள் பற்றி கருத்தளித்தும் தெரிவிக்கலாம்.
Telegram Telegram Info English Petition to Return the Revoked Addresses of Telegram Channels On August 19, Telegram revoked the public addresses of millions of channels around the world without warning their owners. Those channels were often used as personal portfolios, public archives…
  • 👍 6
Post #150 547
செயலற்ற பெயர்களை டெலிகிராம் திரும்பப் பெறுகிறது

கடந்த இரண்டு நாட்களில், டெலிகிராம் நூற்றுக்கணக்கான பொது அரட்டைகளின் பொது முகவரிகளை அவற்றின் உரிமையாளர்களை எச்சரிக்காமல் முடக்கி உள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக அரட்டையற்றவைகளே பெரும்பாலும் முடக்கப்பட்டது.

இது ஒரு பொதுவான நடைமுறை என்றும், திரும்பப் பெறப்பட்ட முகவரிகள் சிறிது காலத்திற்கு மீண்டும் ஆக்கிரமிக்க முடியாது என்றும் டெலிகிராமிற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

மேலும், அதே தகவல் அறிந்த வட்டாரத்தின் கணிப்பின்படி, பொது பயனர்பெயர் அமைப்பை சீர்திருத்த திட்டங்கள் உள்ளன என அறியப்படுகிறது.
  • 👍 2
  • 👏 1
Post #149 725
2022 இல் டெலிகிராமின் செலவுகள்

பஃர்ப்ஸ் (Forbes) இன் தகவல்படி, இப்போது டெலிகிராமின் செலவுகள் ஆண்டுக்கு ரூ4200 கோடி அல்லது மாதத்திற்கு ரூ350 கோடி ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், டெலிகிராமின் பார்வையாளர்கள் 40 முதல் 70 கோடி மாதாந்திர செயல்பாட்டில் உள்ள பயனர்களாக வளர்ந்துள்ளனர், மேலும் ஒரு பயனரின் செலவு வருடத்திற்கு ரூ43 முதல் ரூ60 ஆக அதிகரித்துள்ளது.

பஃர்ப்ஸின் கூற்றுப்படி, அதிகரித்த பயனர் செயல்பாடு மற்றும் சேவையக சாதனங்களின் விலை உயர்வு காரணமாகச் செலவுகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.

#pullivivaram
  • 👍 2
Post #148 583
பேசியதை உரையாக்கும் அம்சம் பாதுகாப்பானது

டெலிகிராம் கட்டமைப்பு மூலம் கூகுளின் பேசியதை உரையாக்கும் சேவையைப் பயன்படுத்துவது பாதுகாப்பான மற்றும் உகந்த தீர்வாகும் என்பதை பாவெல் துரோவ் விளக்கினார்:

— டெலிகிராம் பயனர்களின் தனிப்பட்ட தரவை கூகுள் உடன் பகிர்ந்து கொள்ளாது.
— டெலிகிராம் ஒருபோதும் மூன்றாம் தரப்பினருக்கு ஒலித் தரவை அனுப்பாது.
— தனிப் பயனாக்கப்பட்ட ஒலித் தரவை உரையாக மாற்றி அவற்றைத் திரும்பப் பெறுவதைத் தவிர கூகுளால் அவற்றை உபயோகிக்க முடியாது.
— டெலிகிராம் தனது சொந்த இலவச தீர்வை இதற்கு மேற்கொள்வது அல்லது சிறிய நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கலாம் ஆனால் அது முடிவுகளின் தரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
— கூகுளை நம்புவது டெலிகிராம் மிகைப்பு சந்தாதாரர்களின் தனிப்பட்ட தேர்வாக அமையும்.

பேசியதை உரையாக்கும் அம்சம் தொடர்பான இத்தகவல் டெலிகிராம் தனியுரிமைக் கொள்கை பிரிவு 8.5-யிலிருந்து பெறப்பட்டது.
Telegram Telegram Info தமிழ் in Telegram Info தமிழரட்டை குரல் தகவல் மொழியாக்கலை எதிர்வரும் டெலிகிராம் மிகைப்பு அம்சத்தில் காணலாம்.
  • 👍 1
Post #147 348
3% டெலிகிராம் பயனர்களின் மிகைப்புச் சந்தாவினால் சேவையக செலவுகள் ஈடுகட்டப்படும்

டெலிகிராமின் சேவையக செலவுகளை ஈடுகட்ட தேவைப்படும் டெலிகிராம் மிகைப்புச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பற்றிய பாவெல் துரோவின் அறிவிப்பு:

"டெலிகிராம் மிகைப்பின் நேர்த்தி என்னவென்றால், எங்கள் பயனர்களில் 2½-3% பேர் மட்டுமே இச்சந்தாவிற்குப் பதிவுசெய்தால், பயனர்களின் ஆதரவோடு டெலிகிராம் அதன் செலவுகளை ஈடுகட்டும். பயனர் மையப்படுத்தப்பட்ட ஒரு புதிய சமூக ஊடக சேவை சகாப்தத்தை வரலாற்றில் இது வெளிப்படுத்தும்."
Telegram Pavel Durov Happy Solstice! ☀️✨ 🎉 Telegram now has over 700 million monthly users. With the latest update, we have also launched the Premium subscription on most devices. The beauty of Telegram Premium is that if just 2,5-3% of our users sign up for this subscription…
Post #146 401
குரல் தகவல் மொழியாக்கலை எதிர்வரும் டெலிகிராம் மிகைப்பு அம்சத்தில் காணலாம்.
  • 🔥 2
Post #145 302
கூளிகள் 4ஜிபி கோப்புகளைக் கையாள ஆதரவு

ஒப்பமிடப்பட்ட 32 முழு எண் வகைகளில் கோப்பு அளவு புலங்களின் மதிப்பை இனி சேமிக்க முடியாது என்று அதிகாரப்பூர்வ கூளியின் செயலி நிரல் இடைமுகப்பு பதிதடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் மிகைப்பு பயனர்கள் பதிவேற்றக்கூடிய 4ஜிபி கோப்புகளை ஆதரிக்க இந்த மாற்றம் அவசியம்.

மேம்படுத்தப்படாத கூளிகள் மற்றும் வாடிக்கை செயலிகள் புதிய அளவிலான கோப்புகளுடன் வேலை செய்ய முடியாது என்பதை டெலிகிராம் தகவலகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது.

#Kooli
Post #144 252
டெலிகிராம் மிகைப்பு இப்போது இந்தியாவில் மாதத்திற்கு ₹349 ஆகும்.

#Migaippu
Post #143 252
வலைதளச் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் மட்டுப்படுத்துகிறது என பாவெல் துரோவ் குற்றம் சாட்டினார்

ஏப்ரலில், டெலிகிராம் வலை_கே நிரலுருவாக்குநர், பல ஆண்டுகளாக ஐஓஎஸ்ஸில் ஆப்பிள் சரிசெய்யாத சஃபாரி சிக்கல்களின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.

"ஆப்பிள் அதன் 30% தரகு வருவாய் பெற அதிகமாய் சொந்த செயலிகளை அதன் பயனர்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக அதன் வலைதளச் செயலிகளை வேண்டுமென்றே மட்டுப்படுத்துகிறது என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று பாவெல் துரோவ் தெரிவித்தார்.

இந்த வாரம், போட்டி மற்றும் சந்தைகள் ஆணையம் (இங்கிலாந்து ஒழுங்குமுறை ஆணையம்) ஆப்பிள் தனது கைப்பேசி சாதனங்களில் அதன் சொந்த உலாவிக்கு மாற்றானவற்றைத் தடைசெய்கிறது என்ற கவலையை வெளிப்படுத்தியது.

"ஸ்டீவ் ஜாப் இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் கைப்பேசி வலைதளத்தில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் அதன் மிக முக்கியமான வழித் தடையாக மாறியது வருத்தமளிக்கிறது" என்று பாவெல் துரோவ் கூறினார்.
Telegram Pavel Durov Telegram Web provides an extraordinary experience on desktops, but it also works great on mobile devices. It is prevented, however, from reaching native-app-level quality on iOS, because Apple limits web developers in terms of what they can do on iPhones…
  • 👍 1
Post #142 219
துரோவ் அதிகாரப்பூர்வமாக டெலிகிராம் மிகைப்பு பதிப்பை அறிவித்தார்

பாவெல் துரோவ் தனது டெலிகிராம் பதிதடத்தில் கட்டண சந்தா முறையிலான டெலிகிராம் மிகைப்பு இம்மாதம் வெளியாவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

"«சிறிது யோசித்த பிறகு, எங்களின் தற்போதைய அம்சங்களை இலவசமாக மேலும் தொடரவும், ​​எங்கள் விசிறிகளின் மிகுதியான எதிர்பார்ப்புகளைப் பெற அனுமதிப்பதற்கும் ஒரே வழி, உயர்த்தப்பட்ட வரம்புகளை கட்டண விருப்பமாக மாற்றுவதுதான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் இந்த மாதம் டெலிகிராம் மிகைப்பு பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம், இது கூடுதல் அம்சங்கள், வேகம் மற்றும் சிறப்புகளை யாரும் பெற அனுமதிக்கும் சந்தா திட்டமாகும். டெலிகிராமை ஆதரிக்கவும், புதிய அம்சங்களை முதலில் பெறும் குழாமில் சேரவும் இது பயனர்களை அனுமதிக்கும்».

டெலிகிராமின் தற்போதைய செயல்பாடுகள் அனைவருக்கும் இலவசமாக இருக்கும் என்று பாவெல் துரோவ் கூறினார். மேலும், பொதுவில் கிடைக்கும் புதிய அம்சங்களுடன் செயலி தொடர்ந்து மேம்படுத்தப்படும். மிகைப்பு சந்தாவை வாங்காத பயனர்கள் அதன் சில நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்: எடுத்துக்காட்டாக, முழுத்திரை அசைவூட்டங்களுடன் கூடிய மிகைப்பு ஒட்டுபடங்களைப் காண்பது, பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது அல்லது ஒரு மிகைப்பு தகவலுக்குப் பதிலளிப்பது (இவை அனைத்தும் பணம் செலுத்திய சந்தாதாரரால் அனுப்பப்படுவது) போன்றவை ஆகும்.

பொதுப் பதிதடங்களில் விளம்பரம் செய்வதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்தபோதிலும், டெலிகிராமிற்கு முதன்மையான நிதியளிப்பு பயனர்களால் நிரப்பப்பட வேண்டும், விளம்பரதாரர்களால் அல்ல என்று பாவெல் துரோவ் நம்புகிறார்.

டெலிகிராம் மிகைப்பின் அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, இக்கட்டுரையைப் படிக்கவும்.

#migaippu
Telegram Pavel Durov Since the day Telegram was launched almost 9 years ago, we've been giving our users more features and resources than any other messaging app. A free app as powerful as Telegram was revolutionary in 2013 and is still unprecedented in 2022. To this day, our…
Older posts →
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →