TGViewer
Channel Public Channel
Telegram Info தமிழ்

Telegram Info தமிழ்

@tginfota

டெலிகிராம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.

கூடுதல் தகவலுக்கு @betainfota
Subscribers
162
Photos
45
Videos
7
Links
132
Recent Posts 20 shown
Post #181 2.71K
மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்கிறது.

சில டெலிகிராம் பயனர்களின் உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கிலிருந்து அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர்.

அனுப்புநர்கள் பிற பயனர்களுக்குப் பொருட்களைப் பரிசளித்து, பின்னர் அவர்களின் வங்கி மூலம் பணத்தைத் திரும்பப் பெறத் தொடங்கும் போது இந்தச் செயல் நிகழ்கிறது. இதன் விளைவாக, பணம் அதன் அனுப்புநருக்குத் திருப்பித் தரப்படும், மேலும் பரிசளிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சந்தாக்கள் பெறுநரிடமிருந்து திரும்பப் பெறப்படும்.

நிராகரிக்கப்படும் நேரத்தில் பெறுநர்கள் ஏற்கனவே உடுக்களை செலவழித்திருந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து @tginfo & @tginfota குழுக்களிடம் எந்தத் தகவலும் இல்லை.

#உடᕃகᣞகளᣞ #பரᒉசᕃ #மᒉതகபᣞபᕃ
  • ❤ 5
  • 👍 1
Post #180 2.33K
குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா


ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புதிய நிரல்கள் வாராந்திர டெலிகிராம் மிகைப்புச் சந்தாவைக் குறிப்பிடுகிறது.

இந்நிரல் சில பயனர்கள் ஒருமுறை குறியீடுகளுடன் குறுஞ் செய்திகளைப் பெறும் திறனைக் கட்டுப்படுத்தக் கூடும். அத்தகைய பயனர்களை ஒரு வாரத்திற்கு டெலிகிராம் மிகைப்புச் சந்தா செலுத்த வேண்டும் என டெலிகிராம் வினவலாம்.

அத்தகைய சந்தாவின் விலை தற்போது தெரியவில்லை.

❗ 2021 ❗ ஆம் ஆண்டில், குறுஞ்செய்தி மூலம் டெலிகிராமில் உள்நுழைய அங்கிகரித்த செலவுகள் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவுகளில் கால் பங்கை எட்டின.

#கᕃறᕃஞᣞᘏசயᣞதᒉ #மᒉതகபᣞபᕃ
  • 👍 1
Post #179 1.55K
டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள்

ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புதிய நிரல்கள், செயலியில் உள்ள தேடல் முடிவுகளில் விளம்பரம் விரைவில் தோன்றக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

இந்த நிரல்களின்படி, புதிய விளம்பர அமைவு பின்வருமாறு செயல்படும்:
• விளம்பரங்கள் தேடல் வினவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தாது.
• டெலிகிராம் மிகைப்புச் சந்தாதாரர்கள் விளம்பரங்களை முழுவதுமாக முடக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
• டெலிகிராம் விளம்பரதளம் மூலம் யார் வேண்டுமானாலும் தேடல் முடிவுகளில் விளம்பரங்களை வைக்கலாம்.

#வᒉளமᣞபரமᣞ #மᒉതகபᣞபᕃ
Post #178 1.29K
டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம்

கணக்குகளை முடக்குதல் தொடர்பாக யூனிகிராமின் மூலக் குறியீட்டில் புதிய நிரல்கள் கண்டறியப்பட்டுள்ளது; இது வரவிருக்கும் புதுப்பிப்பில் பயனர் கணக்குகளை 'முடக்க' வைக்கும் திறனை விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும் என்பதைக் குறிக்கிறது.


இந்த நிரல்களின் அடிப்படையில் தெரிவது:

• டெலிகிராமின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினால் கணக்குகள் முடக்கப்படலாம்.

• முடக்கப்பட்டிருக்கும்போது, ​​பயனர்கள் "தங்கள் கணக்கை அணுகலாம், ஆனால் தகவல்களை அனுப்பவோ மற்ற செயல்களைச் செய்யவோ முடியாது". முடக்கப்பட்ட கணக்கு "பார்ப்பதற்கு" மட்டுமே செயல்படும். இந்தக் கட்டுப்பாடு தொடர்புகளுடன் உள்ள தனிப்பட்ட அரட்டை தகவலிடலுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறியப்படுகிறது.

• முடக்கப்பட்ட இந்த டெலிகிராம் பயனர்கள் @SpamBot மூலம் இந்த முடிவை மேல்முறையீடு செய்யும் விருப்பத்தை வழங்கக்கூடும். முடக்கம் நீக்கப்படாவிட்டால், கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்.

• முடக்கப்பட்ட கணக்குகளின் தன்விவரங்களில் மற்ற பயனர்கள் ஒரு சிறப்புக் குறிகாட்டியைக் காண வாய்ப்புள்ளது.

• நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்ட அனைத்து கணக்குகளும் நீக்கப்படுவதற்கு முன்பு "முடக்கம்" என்ற முறை பயன்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இக்கூறு இன்னும் உருவாக்கத்தில் உள்ளது, மேலும் மேலே உள்ள தகவல் @tginfo -இன் அனுமானங்களைக் கொண்டுள்ளது. விவரங்கள் தவறானதாகவோ எதிர்கால மாற்றங்களுக்கு உட்பட்டதாகவோ இருக்கலாம்.

#வᖘᘏணпழᒉபᣞபᕃ
  • ❤ 1
Post #177 1.36K
டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது

டெலிகிராம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பை டெலிகிராம் கணிசமாக அதிகரித்துள்ளது.

• டெலிகிராம் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளின் 900 கோரிக்கைகளை நிறைவேற்ற, 2,253 பயனர்களின் தரவை வழங்குகியுள்ளது.
• 108 பயனர்களைப் பாதிக்கும் 14 கோரிக்கைகள் மட்டுமே அக்டோபர் 2024 வரை செயலாக்கப்பட்டன.
• ஆகஸ்ட் 2024-இல் பிரான்சில் டெலிகிராமின் தலைமை செயலாக்க அதிகாரி துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
• செப்டம்பரில் டெலிகிராம் தனது தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்தது, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இணைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட அனுமதித்தது, ஆனால் சட்டப்பூர்வமாக தேவைப்படும் போது மட்டுமே அவை டெலிகிராமினால் செயலாக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்களின் அழுத்தம் அதிகரித்து வருவதாலே டெலிகிராமின் கொள்கையில் மாற்றம் நிகழ்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக, பயனர் தரவை வழங்குவதில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததற்காக டெலிகிராம் நிறுவனம் உலகளவில் அறியப்பட்டது.

இப்பதிவு எழுதும் நேரத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக் குறித்து டெலிகிராம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

#ஐ௧ᣞகᒉய_அᘏமரᒉ௧ᣞ௧п
  • 👍 1
  • 👎 1
Post #176 1.61K
பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிபரப்பின்படி, பாவெல் துரோவ் பாரிஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைதானார்.

துரோவ் பிரெஞ்சு பாதுகாப்புப் படைகளுடன் ஒத்துழைக்காததால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தல் போன்றவை இதில் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

UPD 23:20 UTC
TF1 இன் அறிக்கை BFM மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

TF1 இன் அறிக்கையின்படி, பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பாரிஸ் வந்தடைந்தார் மற்றும் தோராயமாக 18:00 UTC இல் கைது செய்யப்பட்டார்.

டெலிகிராமில் போதுமான எண்ணிக்கையிலான மதிப்பீட்டாளர்கள் இல்லாததே அதில் சட்டவிரோத செயல்பாடு அதிகரிக்க காரணம் என்று செய்தியாளர்கள் கருதுகிறார்கள்.

ராய்ட்டர்ஸின் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு டெலிகிராம் பதிலளிக்கவில்லை, மேலும் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

@tginfo குழு வரவிருக்கும் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

#கைது
  • 👍 1
Post #175 2.19K
டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிக்கை:

😝 அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிவுகள் மூலம் நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள்.

டெலிகிராமில் ஒளிபரப்பப்படும் பதிதடங்கள் மாதந்தோறும் நூறாயிரம் கோடி பார்வைகளுக்கு உள்ளாகிறது. தற்போது, இந்தப் பார்வைகளில் 10% மட்டுமே டெலிகிராம் விளம்பரங்கள் மூலம் பணமாக்கப்படுகின்றன - இது தனிமறைவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட விளம்பரக் கருவியாகும்.

மார்ச் மாதத்தில், டெலிகிராம் விளம்பர தளம் கிட்டத்தட்ட நூறு புதிய நாடுகளில் உள்ள அனைத்து விளம்பரதாரர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த நாடுகளில் உள்ள பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிதடங்களில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் டெலிகிராம் பெறும் வருவாயில் 50% பெறத் தொடங்குவார்கள்.

விளம்பரக் கட்டணங்கள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் தனித்துவமான இடான் தரவுத்தொடரைப் பயன்படுத்துவோம். துணுக்கில் டெலிகிராம் பயனர்பெயர்களுடன் எங்களின் அணுகுமுறையைப் போலவே, நாங்கள் விளம்பரங்களை விற்று வருவாயை இடான் நாணயம் மூலம் பதிதட உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இது ஒரு நற்பண்புமிக்க வட்டத்தை உருவாக்கும் மேலும் இதில் பதிவிடுவோர்கள் தங்கள் இடான் நாணயங்களைப் பணமாக்க முடியும் - அல்லது அவர்களின் பதிதடங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றை மீண்டும் முதலீடு செய்யலாம்.🤑
  • 👍 4
Post #174 1.83K
சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகள்

டெலிகிராமின் மொழிபெயர்ப்புத் தளத்தில் சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகளுக்கான உரை தோன்றியுள்ளது. உமது சுயக்குறிப்பை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இப்புதிய அமைவு உங்களை அனுமதிக்கும்:

"எனது சுயக்குறிப்பை அறிபவர்:"

இந்த அம்சம் அடுத்த மேம்படுத்தலில் வெளிவரும்.
  • 👍 1
Post #173 1.79K
டெலிகிராம் காப்பகத்தின் நடத்தையை மாற்றுகிறது

டெலிகிராமின் கூற்றுப்படி, காப்பகத்தின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்திய இப்பிழை சரி செய்யப்பட்டது: இப்போது காப்பகப்படுத்தப்பட்ட அரட்டையில் அறிவிப்பு ஏற்பட்டால், அது தனிப்பயன் கோப்புறைகளில் ஒன்றில் வெளிப்படையாகச் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்தை விட்டு வெளியேறாது.

தானியங்கு வடிப்பானில் அரட்டை வகையின்படி அரட்டை ஒரு கோப்புறையில் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்திலிருந்து தொடர்ந்து வெளியேறும்.

டெலிகிராமின் பரிந்துரைகளின் தளத்தில், இந்த நடத்தை எதிர்காலத்தில் மீண்டும் மாறக்கூடும் என்று மதிப்பீட்டாளர் எச்சரிக்கிறார்.
Post #172 1.21K
டெலிகிராம் புள்ளிவிவரச் செயலிழப்பு

புள்ளிவிவரங்கள் வரவில்லை என்று குழு மற்றும் பதிதட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமான வரைபடங்கள் மற்றும் தரவுகளுக்குப் பதிலாக, செயலியின் "புள்ளிவிவரங்களை ஏற்றுகிறது" என்ற தகவலைக் காட்டுகிறது, ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் புள்ளிவிவரத் தரவு தோன்றவில்லை. இப்பிரச்சனை பரவலாய் இருப்பதாகத் தெரிகிறது.

#ᘏசயலᒉழபᣞபᕃ
  • 🆒 2
Post #171 1.21K
குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமேமேம்படுத்தப்பட்ட இலக்கு

புதுப்பிக்கப்பட்டத் தனிமறைவுக் கொள்கையில், விளம்பரத்தளத்தின் புதிய அம்சங்கள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே செயல்படுவதாக டெலிகிராம் தெரிவித்தாலும் அண்மை மாற்றங்கள் பொருந்தக்கூடிய நாடுகளின் பட்டியலை டெலிகிராம் தரவில்லை. அதிகமாய் ரஷ்யமொழி பேசும் பதிதடம் கொண்ட நாடுகளில் விளம்பரக்காட்சியின் போது வட்டாரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியமே இதற்குக் காரணம்.

தனிமறைவுக் கொள்கையின் புதிய பதிப்பு ரஷ்யா & உக்ரைனின் இணையநெறி முகவரிகளிலிருந்து தெரியுமென @tginfo குழு தீர்மானித்துள்ளது.

அருகிலுள்ள நகரம் வரை துல்லியமான இருப்பிட இலக்கும், பயனர் சேர்ந்த குழு & பதிதடப் பட்டியலின்படி ஆர்வங்களைத் தீர்மானித்தலும் & டெலிகிராமிற்கு வெளியே சேகரிக்கப்பட்டப் பயனர் தரவின்படியும் பயனரைக் கட்டுப்படுத்தும் திறன் விளம்பரத் தளத்தின் புதிய அம்சங்களிலுள்ளது.

பெரிய பதிதடங்களில் (>1000 நேயர்கள்) மட்டுமே விளம்பரங்கள் காட்டப்படும்.

மிகைப்புச் சந்தாதாரர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரத்தின் நோக்கத்திற்காகத் தனிப்பட்டத் தரவு செயலாக்கப்படாது என்பதை டெலிகிராம் தெளிவுபடுத்துகிறது.
Post #170 841
டெலிகிராம் விளம்பரத் தனிப்பயனாக்கத்திற்கான அணுகுமுறையை மாற்றுகிறது

டெலிகிராம் அதன் விளம்பர தளத்தைப் புதுப்பித்துள்ளது. இப்போது, பயனரின் விருப்பங்கள் மற்றும் அருகிலுள்ள நகரத்தின் இருப்பிடம் போன்ற பயனரின் தனிப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டலாம்.

துரோவின் நிரல்படி, ஒரு பயனர் குழுசேர்ந்த பதிதடங்களின் பட்டியலின் அடிப்படையில் ஆர்வங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். பயனரின் இணையநெறி முகவரி மூலம் டெலிகிராம் தீர்மானிக்கும் இருப்பிடத் தரவின் அடிப்படையில் பார்வையாளர்களை விளம்பரதாரர்கள் கட்டுப்படுத்த முடியும்.

டெலிகிராமிற்கு வெளியே சேகரிக்கப்பட்டப் பயனர் தரவுத்தளத்தின் அடிப்படையில் விளம்பரதாரர்கள் பயனர்களுக்கு விளம்பரங்களைக் குறிவைக்க அனுமதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வணிகர் டெலிகிராம் அதன் தாறுமாறானத் தொலைபேசி எண் தரவுத்தளத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகையைக் காட்ட முடியும்.

முன்னதாக, விளம்பரதாரர்கள் பொதுத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே விளம்பரப் பார்வையாளர்களைத் தனிப்பயனாக்க முடியும், உதாரணமாக, நிதி சார்ந்த பதிதடங்களில் மட்டுமே விளம்பரத்தைக் காண்பிக்கும்.

புதிய மாற்றங்கள் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை அடிக்கடி காண்பிக்க அனுமதிக்கின்றன, அதாவது டெலிகிராமின் நிரல்நெறிமுறைகள் நீங்கள் நிதியில் ஆர்வமாக இருப்பதாக நினைத்தால், மற்ற தொடர்பற்றப் பதிதடங்களில் நிதி தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்.

இதே அணுகுமுறையை கூகுள் போன்ற பிற நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. விளம்பரதாரர்கள் பயனரைப் பற்றிய மூலத் தகவலைப் பெறவில்லை என்றாலும், தனிப்பட்டத் தரவு இப்போது தனிப்பயனாக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

நீங்கள் விளம்பர இணைப்பைச் சொடுக்கினால் மட்டுமே, ஒரு பயனர் குழுவுடனான உங்கள் தொடர்பை விளம்பரதாரர்கள் மறைமுகமாகத் தீர்மானிக்க முடியும். நீங்கள் விளம்பரத்தைப் புறக்கணித்தால், தரவு எதுவும் மாற்றப்படாது.

துரோவின் நிரல்படி, இது இணைப்பு அணுகல் அமைப்புகளை ஆதாயத்திற்குத் தவறாகப் பயன்படுத்தி டெலிகிராமின் பெரிய தனியார் பதிதடங்களில் விளம்பரங்களைக் காட்டவும் திட்டமிட்டுள்ளது.
  • 🆒 1
Post #168 1.18K
பாவெல் துரோவ் வரவிருக்கும் கதைத்தலை அறிவித்தார்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஜூலை தொடக்கத்தில் டெலிகிராமில் கிடைக்கும்.

அம்சங்கள்:

• தனிமறைவு
தங்களின் ஒவ்வொரு கதையையும் யார் பார்ப்பார்கள் என்பதைப் பயனர்கள் தீர்மானிக்க முடியும்.

• சிறிய இடைமுகம்
அரட்டைப் பட்டியலின் மேலே விரிவாக்கக்கூடிய பிரிவில் கதைகள் வைக்கப்படும்.

• நெகிழ்வுத்தன்மை
கதைகளை எளிதில் மறைக்க முடியும்.

• குறிப்புகள்
பயனர்கள் படங்களையும் காணொளிகளையும் திருத்த முடியும், அத்துடன் குறிப்புகளைச் சேர்க்கலாம் மற்றும் பிறரைக் குறியிடலாம்.

• இரட்டைப் படக்கருவி
முன் மற்றும் பின்புற படக்கருவிகளுடன் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டக் கதைகளைப் பதிவிட பயனர்களால் முடியும்.

• நெகிழ்வு காலாவதி விருப்பங்கள்
கதையின் வாழ்நாளைத் தெரிவுசெய்யவும் பயனர்களால் முடியும்.

சுயவிவரப் பக்கத்தில் அவர்களின் கதைகளைச் சேமிக்கும் திறன் டெலிகிராம் சுயவிவரங்களை மேலும் தகவல் மற்றும் வண்ணமயமானதாக மாற்றும். பயனர்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளிலிருந்து அதிகமான உள்ளடக்கத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், பொது அரட்டைகளில் அவர்கள் தொடர்பு கொள்ளும் பயனர்களைப் பற்றி மேலும் அறியலாம்.
Post #167 777
டெலிகிராம் நகல் பற்றி துரோவ்

அவரது பதிதடத்தின் அண்மை பதிவில், கடந்த பத்து ஆண்டுகளாய் தகவலிடும் போக்குகளை வரையறுக்க முடிந்ததற்காக பாவெல் துரோவ் டெலிகிராமைப் பாராட்டினார். மேலும் தனது பதிதடத்தின் விவாத அரட்டைக்கு அனுப்பப்பட்ட அது தொடர்புடைய பகடி பற்றியும் குறிப்பிட்டார்.

அதை இங்கே படிக்கலாம் »
Post #166 1.47K
கணினிக்கான டெலிகிராம் இனி கைப்பேசி எண்ணை மாற்ற அனுமதிக்காது

டெலிகிராம் பயனர்கள் விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் உட்பட அணித்துக் கணினிக்கான டெலிகிராமில் தங்கள் கணக்கின் கைப்பேசி எண்களை மாற்ற முடியாது.

பாதுகாப்பு காரணங்களால் இந்த வரம்பு இருக்கலாம் என்று டெலிகிராம் தகவல் குழு நம்புகிறது.

ஆண்ட்ராடு அல்லது ஐஓஎஸ்ஸுக்கான டெலிகிராமில் உங்கள் கைப்பேசி எண்ணை நீங்கள் இப்போதுகூட மாற்றலாம் என்பதை நினைவூட்டுகிறோம். இதைச் செய்ய, "அமைவுகள்" பகுதியைத் திறந்து, கைப்பேசி எண்ணைத் தட்டவும்.
Post #165 925
மலேசியாவின் கோரிக்கைகள் டெலிகிராமால் பதிலளிக்கப்படவில்லை

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து கூடிப்பேச பல கோரிக்கைகள் வைத்தும், டெலிகிராம் அமைச்சகத்துடன் "ஒத்துழைக்க மறுக்கிறது" என்று மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் எண்மத் தொழில்நுட்ப அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.

மோசடி, ஆபாசம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை போன்றவற்றில் டெலிகிராமின் தவறான பயன்பாடு குறித்து தனது அமைச்சகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.

டிக்டோக், முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் ஏற்கனவே அமைச்சகத்துடன் ஒத்துழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் எண்மத் தொழில்நுட்ப அமைச்சகம், MCMC மற்றும் தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி (NACSA) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, சமூக வலைதளங்கள் உட்பட இணையப் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது என்று ஃபட்ஸில் கூறினார்.

"உண்மை என்னவென்றால், டெலிகிராம் தான் அதிக கவலையை ஏற்படுத்துகிறது" என்று ஃபஹ்மி ஃபட்சில் முடித்தார்.

@tginfoms -இல் டெலிகிராம் மற்றும் மலேசியா பற்றிய கூடுதல் செய்திகளைப் படிக்கவும்.

#மⵛலசᒉயп
Post #164 541
டெலிகிராம் பதிவிறக்க வளர்ச்சி

சென்சார் டவரின் தகவல்படி, டெலிகிராம் மற்றும் வீசேட் மட்டுமே 2020 ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2023 ஆம் முதல் காலாண்டில் பதிவிறக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன.

#பᕃளᣞளᒉவᒉவரமᣞ
Post #163 560
ஐயமும் தீர்வும்: அரட்டை உரிமையாளரின் தனித்துவ உரிமைகள்

அனைத்து சாத்தியமான அனுமதிகளையும் பெற்ற மற்ற நிர்வாகிகளை விட ஒரு குழு அல்லது பதிதடத்தின் உரிமையாளருக்கு அதிக உரிமைகள் உள்ளன.

உரிமையாளரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாத செயல்களின் பட்டியல்:

பொதுவான செயல்கள்:
• குழு அல்லது பதிதட வகையைப் பொது அல்லது தனிப்பட்டதாக மாற்றுதல்
• பொதுக் குழு அல்லது பதிதடத்திற்கான பயனர்பெயரை அமைத்தல்.
• "உள்ளடக்கச் சேமிப்பை" இயக்க அல்லது முடக்க.
• தலைப்புகளை இயக்க (உரையாடும் மன்றமாக மாற்றுதல்) அல்லது முடக்க.
• பொதுக் குழுவில் "ஒப்புதல் முறை" தெரிவை இயக்க அல்லது முடக்க.
• அரட்டையிலிருந்து வெளியேறி மீண்டும் இணைந்த பிறகு உரிமையாளரின் உரிமைகளைப் பேணுதல்.
• குழு அல்லது பதிதடத்தை அழித்தல். குழு அல்லது பதிதடத்தில் 1,000 பேருக்கு மேல் இருந்தால், அதை அழிக்க டெலிகிராமைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
• குழுக்களுக்குத் தகவல்களை பொதுப் பதிதடங்களாக அனுப்புதல் (மிகைப்பு அம்சம்).

நிர்வாக மேலாண்மை:
• நிர்வாகிகளைப் பதவி உயர்த்துதல், தரமிறக்குதல் அல்லது அவர்களின் உரிமைகளை மாற்றுதல். வழக்கமான நிர்வாகிகள் தாங்கள் பதவி உயர்வு அளித்த நிர்வாகிகள் அல்லது துணை நிர்வாகிகளால் பதவி உயர்வு பெற்ற நிர்வாகிகளின் அனுமதிகளை மட்டுமே மாற்ற முடியும்.
• பிற நிர்வாகிகளால் உருவாக்கப்பட்ட அழைதொடுப்புகளைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல்.
• உடமை உரிமையை மாற்றுதல் (இரண்டு-படி சரிபார்ப்பு இயக்கத்தில் இருந்தால்).

#ஐயமᕃமᣞதᖘரᣞவᕃமᣞ
  • 👍 1
Post #162 1.17K
ஆவண மேம்படுத்தல்

அதிகாரப்பூர்வ டெலிகிராம் இணையதளம் அதன் ஆவணப் பக்கத்தை மேம்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அதிகாரப்பூர்வமற்றச் செயலிகளுக்கானப் புதிய அங்கீகார செயல்முறை மாற்றங்கள், கூளியின் சுயவிவரங்களைத் திருத்துதல் மற்றும் பிற புதிய அம்சங்களை விளக்குகின்றன. அடுக்கு எண் 146 முதல் அனைத்து மாற்றங்களையும் மேம்படுத்தல் உள்ளடக்கியுள்ளது.

#ஆவணமᣞ
Older posts →

About this channel

How can I read @tginfota without a Telegram account?
TGViewer shows the public web preview Telegram publishes for Telegram Info தமிழ்: recent posts, photos, videos and the subscriber count, with no app, login or account.
How many subscribers does Telegram Info தமிழ் have?
Telegram Info தமிழ் (@tginfota) has 162 subscribers on Telegram, refreshed roughly every 30 minutes.
Does Telegram Info தமிழ் know I viewed it here?
No. Public channel previews carry no viewer identity, and TGViewer has no accounts or tracking of what you look up.
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →