TGViewer
Telegram Info தமிழ் Telegram Info தமிழ் @tginfota · 162 subscribers
Post #177 1.36K
டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது

டெலிகிராம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பை டெலிகிராம் கணிசமாக அதிகரித்துள்ளது.

• டெலிகிராம் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளின் 900 கோரிக்கைகளை நிறைவேற்ற, 2,253 பயனர்களின் தரவை வழங்குகியுள்ளது.
• 108 பயனர்களைப் பாதிக்கும் 14 கோரிக்கைகள் மட்டுமே அக்டோபர் 2024 வரை செயலாக்கப்பட்டன.
• ஆகஸ்ட் 2024-இல் பிரான்சில் டெலிகிராமின் தலைமை செயலாக்க அதிகாரி துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
• செப்டம்பரில் டெலிகிராம் தனது தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்தது, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இணைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட அனுமதித்தது, ஆனால் சட்டப்பூர்வமாக தேவைப்படும் போது மட்டுமே அவை டெலிகிராமினால் செயலாக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்களின் அழுத்தம் அதிகரித்து வருவதாலே டெலிகிராமின் கொள்கையில் மாற்றம் நிகழ்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக, பயனர் தரவை வழங்குவதில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததற்காக டெலிகிராம் நிறுவனம் உலகளவில் அறியப்பட்டது.

இப்பதிவு எழுதும் நேரத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக் குறித்து டெலிகிராம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

#ஐ௧ᣞகᒉய_அᘏமரᒉ௧ᣞ௧п
  • 👍 1
  • 👎 1
More from @tginfota
  1. Apr 3, 2025மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்…
  2. Mar 25, 2025குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.…
  3. Mar 24, 2025டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள் ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புத…
  4. Mar 18, 2025டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம் கணக்குகளை முடக்குத…
  5. Aug 25, 2024பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிப…
  6. Feb 28, 2024டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிக்கை: 😝 அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாள…
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →