இந்தியாவில் டெலிகிராம் மிகைப்பின் விலை குறைந்துள்ளது
இந்திய பயனர்களுக்கான மின்அஞ்சல் பட்டியலில், டெலிகிராம் மிகைப்பு சந்தாவை மிகவும் மலிவு விலையில் உருவாக்குவதாக டெலிகிராம் கூறியது. இந்தியாவில் மாதாந்திர சந்தா இப்போது 179 இந்திய ரூபாய்கள் (2.2 அமெரிக்க டாலர்கள்) - இதற்கு முன்பு 469 இந்திய ரூபாய்கள் (5.74 அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
டெலிகிராமின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. டேட்ட.ஏஐ (data.ai) பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, டெலிகிராம் நாட்டில் 12 கோடி செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது, இது வட்ஸ்ஆப்பிற்கு அடுத்தபடியாக உள்ளது.
டெலிகிராம் தகவல், பல இந்திய பதிதடங்களைக் கொண்டுள்ளது:
— இந்தி @tginfohi
— மலையாளம் @tginfoml
- பெங்காலி @tginfobn
— தமிழ் @tginfota
— கன்னடம் @tginfokn
இவற்றுள் தன்னார்வத் தொண்டு செய்யக்கூடிய மேற்கண்ட மொழியில் ஏதேனும் ஒன்றை தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தேடுகிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், @infowritebot -இல் எங்களுக்கு எழுதவும்.
Post #152
993