TGViewer
Telegram Info தமிழ் Telegram Info தமிழ் @tginfota · 162 subscribers
Post #142 219
துரோவ் அதிகாரப்பூர்வமாக டெலிகிராம் மிகைப்பு பதிப்பை அறிவித்தார்

பாவெல் துரோவ் தனது டெலிகிராம் பதிதடத்தில் கட்டண சந்தா முறையிலான டெலிகிராம் மிகைப்பு இம்மாதம் வெளியாவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

"«சிறிது யோசித்த பிறகு, எங்களின் தற்போதைய அம்சங்களை இலவசமாக மேலும் தொடரவும், ​​எங்கள் விசிறிகளின் மிகுதியான எதிர்பார்ப்புகளைப் பெற அனுமதிப்பதற்கும் ஒரே வழி, உயர்த்தப்பட்ட வரம்புகளை கட்டண விருப்பமாக மாற்றுவதுதான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் இந்த மாதம் டெலிகிராம் மிகைப்பு பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம், இது கூடுதல் அம்சங்கள், வேகம் மற்றும் சிறப்புகளை யாரும் பெற அனுமதிக்கும் சந்தா திட்டமாகும். டெலிகிராமை ஆதரிக்கவும், புதிய அம்சங்களை முதலில் பெறும் குழாமில் சேரவும் இது பயனர்களை அனுமதிக்கும்».

டெலிகிராமின் தற்போதைய செயல்பாடுகள் அனைவருக்கும் இலவசமாக இருக்கும் என்று பாவெல் துரோவ் கூறினார். மேலும், பொதுவில் கிடைக்கும் புதிய அம்சங்களுடன் செயலி தொடர்ந்து மேம்படுத்தப்படும். மிகைப்பு சந்தாவை வாங்காத பயனர்கள் அதன் சில நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்: எடுத்துக்காட்டாக, முழுத்திரை அசைவூட்டங்களுடன் கூடிய மிகைப்பு ஒட்டுபடங்களைப் காண்பது, பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது அல்லது ஒரு மிகைப்பு தகவலுக்குப் பதிலளிப்பது (இவை அனைத்தும் பணம் செலுத்திய சந்தாதாரரால் அனுப்பப்படுவது) போன்றவை ஆகும்.

பொதுப் பதிதடங்களில் விளம்பரம் செய்வதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்தபோதிலும், டெலிகிராமிற்கு முதன்மையான நிதியளிப்பு பயனர்களால் நிரப்பப்பட வேண்டும், விளம்பரதாரர்களால் அல்ல என்று பாவெல் துரோவ் நம்புகிறார்.

டெலிகிராம் மிகைப்பின் அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, இக்கட்டுரையைப் படிக்கவும்.

#migaippu
Telegram Pavel Durov Since the day Telegram was launched almost 9 years ago, we've been giving our users more features and resources than any other messaging app. A free app as powerful as Telegram was revolutionary in 2013 and is still unprecedented in 2022. To this day, our…
More from @tginfota
  1. Apr 3, 2025மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்…
  2. Mar 25, 2025குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.…
  3. Mar 24, 2025டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள் ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புத…
  4. Mar 18, 2025டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம் கணக்குகளை முடக்குத…
  5. Jan 8, 2025டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது டெலிகிராம் வெ…
  6. Aug 25, 2024பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிப…
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →