TGViewer
Telegram Info தமிழ் Telegram Info தமிழ் @tginfota · 162 subscribers
Post #151 2.25K
டெலிகிராம் பதிதடங்களின் பொதுப்பெயர் பறிக்கப்பட்டதை மீட்டெடுக்க மனு

ஆகஸ்ட் 19 அன்று, டெலிகிராம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானப் பதிதடங்களின் பொதுப்பெயர்களை அவற்றின் உரிமையாளர்களை எச்சரிக்காமல் பறித்துக் கொண்டது.

அப்பதிதடங்கள் பெரும்பாலும் தனிப்பட்டத் தொகுப்புகள், பொதுக் காப்பகங்கள் மற்றும் கோப்பகங்களாகப் பயன்படுத்தப்பட்டன, அவை அடிக்கடி உள்ளடக்கத்தை இடுகையிட வேண்டிய அவசியமில்லை.

இச்செயல்முறை பலரை வருத்தப்படுத்தியது மற்றும் டெலிகிராமிலேயே நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வந்தது. பதிதட உரிமையாளர்களுக்கு முன் எச்சரிக்கை இல்லாமல் இதுபோன்ற செயல்களால் டெலிகிராமை எந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்த முடியாமல் பலர் நம்பிக்கையற்று உள்ளனர்.

டெலிகிராம் தகவல் ஆசிரியர் குழு, @tginfo & அதன் சர்வதேச தன்னார்வலர்கள் குழுவினர் டெலிகிராமைப் பின்வருமாறு கோருகின்றனர்:

• பறிமுதல் செய்யப்பட்ட பொது முகவரிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி அனுப்பவும்.
• இதுபோன்ற செயல்களைப் பற்றி செயலற்ற பதிதடங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கவும்.
• ஆபத்தில் இருக்கக்கூடிய பொதுப் பெயர்களைப் பெற பயனர்களை அனுமதிக்கவும்.

நீங்கள் மனுவில் பங்கேற்க விரும்பினால், கீழே ஒரு 👍 பதிலடி மூலமம் இதை உங்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்தும் வெளிப்படுத்தவும். டெலிகிராமில் உள்ள பெரும்பாலான பயனர்கள் இந்த செயலுக்கு எதிரானவர்கள் என்று சொல்ல இதுவே ஒரே வழி.

அல்லது டெலிகிராமின் இச்செயல் நியாயமானது என்று நீங்கள் நினைத்தால் 👎 பதிலடி மூலமம், அதன் நன்மைகள் பற்றி கருத்தளித்தும் தெரிவிக்கலாம்.
Telegram Telegram Info English Petition to Return the Revoked Addresses of Telegram Channels On August 19, Telegram revoked the public addresses of millions of channels around the world without warning their owners. Those channels were often used as personal portfolios, public archives…
  • 👍 6
More from @tginfota
  1. Apr 3, 2025மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்…
  2. Mar 25, 2025குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.…
  3. Mar 24, 2025டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள் ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புத…
  4. Mar 18, 2025டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம் கணக்குகளை முடக்குத…
  5. Jan 8, 2025டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது டெலிகிராம் வெ…
  6. Aug 25, 2024பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிப…
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →