TGViewer
Channel Public Channel
Telegram Info தமிழ்

Telegram Info தமிழ்

@tginfota

டெலிகிராம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.

கூடுதல் தகவலுக்கு @betainfota
Subscribers
162
Photos
45
Videos
7
Links
132

Showing posts older than #142 · Back to latest

Older Posts 20 shown
Post #141 186
வரவிருக்கும் முழுத்திரை அசைவூட்டங்கள்.
Post #140 177
டெலிகிராம் மிகைப்பு ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான வெள்ளோட்டப் பதிப்பில் உள்ளது

சந்தாவிற்கு மாதம் கிட்டத்தட்ட ரூ.400 செலவாகும் (சரியாக 4.99 டாலர்), ஆனால் அதை வாங்குவதற்கு ஏதுவாய் சந்தைக்கு இன்னும் வரவில்லை. எனவே, முன்பு அறிவித்த அனைத்து மிகைப்பு அம்சங்களும் முழுமையாய் கிடைக்கவில்லை.

இருப்பினும், பல புதுமைகள் அடங்கியுள்ளன, அவற்றின் அனைத்து விவரங்களும் ஏற்கனவே நமது @betainfota பதிதடத்தில் உள்ளன. எனவே, இப்புதிய அம்சங்கள் பெற ஆண்ராய்டு வெள்ளோட்டப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம்.

#Android #vellottam
Post #139 466
டெலிகிராம் மிகைப்பு: கட்டணச் சந்தாவின் அனைத்து விவரம்

டெலிகிராம் அதன் சந்தா முறையில் பல கட்டண அம்சம் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.

சந்தா உள்ளடக்கிவை:
• இரட்டிப்பு வரம்புகள்.
• 4 ஜிபி பதிவேற்ற அளவு.
• வேகமான பதிவிறக்கம்.
• குரலால்-உரை மாற்றம்.
• விளம்பரங்கள் இல்லை.
• தனிப்பட்ட பதிலடிகள்.
• மிகைப்பு ஒட்டுபடங்கள்.
• மேம்பட்ட அரட்டை மேலாண்மை.
• சுயவிவர முத்திரை.
• அசைவூட்ட அவதாரங்கள்.
• செயலிக்குக் கூடுதல் சின்னங்கள்.

இக்கட்டுரையில், டெலிகிராம் மிகைப்பு பயனர்களுக்குக் காத்திருக்கும் நன்கு அறியப்பட்ட அனைத்து புதுமைகளையும் நாம் கூர்ந்து கவனிக்கலாம்.

#migaippu
Telegram Info Telegram Premium: all the details about the paid subscription Telegram is introducing its own subscription, which will include several paid features and functions.
Post #138 166
பல பயனர்களின் தரவுகளை ஜெர்மன் காவல்துறையிடம் டெலிகிராம் ஒப்படைத்ததாக டெர் ஸ்பீஜெல் (Der Spiegel) தெரிவித்துள்ளது.

இது பாலர் வன்கொடுமை மற்றும் பயங்கரவாத சந்தேகமுள்ள நபர்களின் தரவு பற்றியது என அறியப்படுகிறது. இருப்பினும், பிற குற்றங்களை மீறும் விடயத்தில், ஜேர்மன் புலனாய்வாளர்கள் டெலிகிராமில் இருந்து தகவல்களைப் பெறுவது இன்னும் கடினமாக உள்ளது.

இதுதொடர்பாக @tginfoger -இல் ஜெர்மன் மொழில் அறியலாம்.

#Germany
  • 👍 1
Post #137 479
ஃபிக்மாவில் டெலிகிராம் வடிவமைப்பு

வலைக் கூளிகளின் வருகைக்குப் பிறகு, டெலிகிராமின் ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கு ஏற்ற வலைதள இடைமுகங்களை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ கருவிகள் இல்லாதது ஒரு வெளிப்படையானக் குறை.

இருப்பினும், மூன்றாம் தரப்பு வடிவமைப்பாளர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட ஃபிக்மா டெலிகிராம் ஆண்ட்ராய்டு பயன்நுகர்வு இடைமுகக் கூறுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செயலி இடைமுகத்தின் அனைத்து கூறுகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. அதன் தொகுப்பில் 40 பக்கங்களுக்கு மேல் உள்ள கூறுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றிய விளக்கங்கள், பல்வேறு வழிகாட்டிகள் மற்றும் குறிப்புகள் உள்ளன. டெலிகிராம் வடிவமைப்பு விரிவாகப் புரிந்துகொள்ளவும், வலைக் கூளிகளுக்கான இடைமுகங்கள், @designers ஏற்ற கருத்துருக்கள் மற்றும் பலவற்றை உருவாக்கவும் இது உதவும்.

எனவே, நிரலுருவாக்குநர்கள் வடிவமைப்பில் குறைந்த நேரத்தைச் செலவிட்டு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம். இடைப்பட்ட நேரத்தில், பயனர்கள் பெரும்பாலான கூளிகளில் நிலையான வடிவமைப்பைப் பெறுவார்கள்.

கூறுகளின் முழு தொகுப்பையும் இத்தொடுப்பில் காணலாம்.
Post #136 146
டெலிகிராம் "விலையில்லாதது" என்பதன் விளக்கத்தை மாற்றியது

2013 முதல்:
டெலிகிராம் எப்போதும் இலவசம். விளம்பரங்கள் இல்லை.
சந்தா கட்டணம் இல்லை.

இப்போது:
டெலிகிராம் அரட்டைகள் மற்றும் ஒலியொளிகளுக்கு இலவச வரம்பற்ற மேகத்தரவு சேமிப்பகத்தை வழங்குகிறது.

டெலிகிராம் மிகைப்பு சந்தாவில் வேலை செய்கிறது என்பதை நினைவில் கொள்க மேலும் இது வரவிருக்கும் மேம்படுத்தலில் தோன்றும்.
Post #135 195
வலைக் கூளிகளின் புதிய அம்சங்கள்

வலைக் கூளி தரும் விலைப் பட்டியல்களை இணைப்பாக அனுப்ப முடியும். அவற்றை உலாவியில் திறக்கலாம், நண்பர்களுக்கு அனுப்பலாம் அல்லது பதிவுத்தடத்தில் பதிவிடலாம். அநேகமாக, வலைக் கூளி்கள் மட்டுமல்ல, எளிமையானவர்களும் அத்தகைய இணைப்புகளை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும்.

முன்னதாக, விலைப் பட்டியல்கள் ஒரு சிறப்பு கூலியைப் பயன்படுத்தி மட்டுமே வழங்கப்பட்டன (உதாரணமாக, தகவலின் கீழ் "நன்கொடை" பொத்தான்).

வலைக் கூளிகள் ஒரு விலைப் பட்டியலைத் திறந்து அதன் நிலையைக் கண்காணிக்க முடியும் (பணம் செலுத்தப்பட்டது, நிராகரிக்கப்பட்டது, பிழையுடன் முடிந்தது) மற்றும் அதைப் பற்றிய தகவலை வழங்க முடியும்.

https://t.me/invoice/tginfo போன்ற சொடுக்கக் கூடிய இணைப்பு சில சொடுக்குகளில் பணம் செலுத்த உங்களை அனுமதிக்கும்.

tg://invoice?slug=tginfo போன்ற இணைப்புகள் டெலிகிராமில் நேரடியாகக் கிடைக்கும்

இதுபோன்ற இணைப்புகள் டெலிகிராமின் அடுத்த மேம்படுத்தல்களில் செயல்படத் தொடங்கும், ஆனால் தற்போது அவை பயனர் அறியா @invoice பதிவுத்தடத்திற்குத் திருப்பி விடுகின்றன.
  • 👍 1
Post #134 189
டெலிகிராம் மிகைப்பின் முதல் கட்ட அம்சங்கள்

டெலிகிராம் மிகைப்பு சார்ந்த சில அம்சங்கள் வெளியானது. அவற்றில் கூடுதல் பதிலடிகள், முழுத்திரை அசைவூட்ட ஒட்டுபடங்கள் உள்ளன.

ஐஓஎஸ் வெள்ளோட்ட சோதனை பதிப்பு வழியாக சேவையக விற்பனை அம்சங்களை மட்டுமே காணலாம். ஆனால், சந்தாவை அணுகுவது தற்போது சாத்தியமற்றது.
Post #133 255
அனுப்பப்பட்ட தகவல்களுக்கான பதில்களைச் சேமித்தல்.

வரவிருக்கும் டெலிகிராம் மேம்படுத்தலில், ஒரே நேரத்தில் பல தகவல்களை அனுப்பும்போது, ​​உள்ளக பதிலளிப்புகள் சேமிக்கப்படும். அதாவது, பரிந்தனுப்பப்பட்ட தகவல்களில், அசல் உரையாடலைப் போலவே முழு தகவல் தொடர்ச்சியையும் நீங்கள் பார்க்க முடியும்.

மேக்ஓஸ் பதிப்பின் வழியாக அனுப்பப்படும் தகவல்களில் உள்ள பதிலளிப்புகள், டெலிகிராமின் தற்போதைய அனைத்து பயனர் செயலிகளிலும் ஏற்கனவே காணப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

#macOS
Post #132 308
🆕 புதியதாகப் புகாரளிப்பதில் சேர்க்கப்பட்டவை:

• போதைப்பொருள்
• தனிப்பட விவகாரம்

*பூனைக்கு விதிவிலக்கு
@Telegram #beta #iOS v8.6
Post #131 585
ஜெர்மன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டெலிகிராம் 64 குழுக்களை முடக்கியது.

ஜெர்மனியில் உள்ள 64 டெலிகிராம் குழுக்களை யூத-எதிர்ப்பு மற்றும் வெறுப்பைத் தூண்டியதற்காக உள் விவகார அமைச்சகம் மற்றும் குற்றவியல் காவல்துறையின் கோரிக்கையின் பெயரில் முடக்கியுள்ளது.

பிப்ரவரி 10 அன்று, அரசாங்கத்திற்கும் டெலிகிராம் நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாவது சந்திப்பு நடந்தது. சுவிடீஷ் ஸெயிடுன்ங் (Süddeutsche Zeitung) செய்தித்தாள் அத்தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சதி சித்தாந்தவாதியான அட்டிலா ஹில்ட்மேனின் டெலிகிராம் பதிவுத்தடங்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஜெர்மனியில் கிடைக்கப் பெறவில்லை. டெலிகிராமில் 1,00,000 நேயர்களைக் கொண்ட ஒரு பதிவுத்தடத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான சதி சித்தாந்தம் மற்றும் வெறுப்பைத் தூண்டும் கட்டுக்கதைகளை ஹில்ட்மேன் பரப்பியதாற்காக பிப்ரவரி 2021 முதல், 40 வயதுடைய அவர் ஜெர்மனியில் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டு துருக்கியில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தகவலுக்கு ஜெர்மன் மொழியில் இங்கே அறியலாம்: @tginfoger

#நீதிமன்றங்கள் #ஜெர்மனி
Telegram Telegram Info தமிழ் ஜெர்மன் அரசாங்கத்துடன் டெலிகிராம் ஒத்துழைக்க விரும்புகிறது ஜெர்மனியில் டெலிகிராம் சார்பாக தொடர்புகொள்ள உயர் மட்ட அதிகாரி இல்லாததற்கு எதிராக இரண்டு அபராத நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன அதனையடுத்து, டெலிகிராம் இப்போது ஜெர்மன் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளது.…
Post #130 1.17K
ஜெர்மன் அரசாங்கத்துடன் டெலிகிராம் ஒத்துழைக்க விரும்புகிறது

ஜெர்மனியில் டெலிகிராம் சார்பாக தொடர்புகொள்ள உயர் மட்ட அதிகாரி இல்லாததற்கு எதிராக இரண்டு அபராத நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன அதனையடுத்து, டெலிகிராம் இப்போது ஜெர்மன் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

டைஸெயிட் (Die Zeit) அறிக்கையின்படி, ஜெர்மன் உள்துறை அமைச்சகம், கூகுள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி மூலம் டெலிகிராமின் உயர் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முடிந்தது. ஒரு காணொளி உடையாடலில், டெலிகிராம் நிறுவனம், ஜெர்மனின் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் மத்திய நீதி அமைச்சகத்துடன் ஒத்துழைக்க அதிகப்படியான விருப்பத்தை வெளிப்படுத்தியது. கூடுதலாக, உயர் மட்ட தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனியின் மத்திய உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தனது ட்விட்டரில், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நல்ல வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார். டெலிகிராம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பரிமாற்றம் எதிர்காலத்தில் தொடரும் மற்றும் தீவிரப்படுத்தப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
Telegram Telegram Info English Two investigations against Telegram launched in Germany Both launched cases are related to the absence of a commissioner for Telegram in Germany, the messenger is threatened with fines. The company must appoint a responsible person to resolve legal issues.…
Post #129 636
டெலிகிராமிற்குத் தடை விதிக்க பிரேசில் பரிசீலித்து வருகிறது

பிரேசிலில் உள்ள அதிகாரிகள், அக்டோபரில் திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக, பல்வேறு தவறான தகவல்களை அனுப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

TSE -இன் தற்போதைய தலைவர், லூயிஸ் ராபர்டோ பரோசோ பல கடிதங்களை பாவெல் துரோவுக்கு அனுப்பினார், ஆனால் பதில் கிடைக்கவில்லை. இந்த கடிதங்களில், டெலிகிராம் நிர்வாகத்துடன் TSE ஒரு சந்திப்பை நடத்தவும், வரவிருக்கும் தேர்தல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குச் சாத்தியமான நடவடிக்கைகளை விவாதிக்கவும் முன்மொழியப்பட்டது. இதேபோன்ற ஏற்பாடுகள் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ளன.

அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் மத்தியில் டெலிகிராம் சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவர் டெலிகிராம் பதிவுத்தடத்தைத் தொடங்கினார் மற்றும் சரிதொடுப்பு குறியையும் பெற்றார், மேலும் 2018 இல் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக ஊடகத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார்.

"2022 தேர்தல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர்கள் யாரும் சரியான சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாமல் பிரேசிலில் பணியாற்ற முடியாது, இது தேசிய சட்டங்கள் மற்றும் நீதித்துறை முடிவுகளுக்கு இணங்குவதற்கு பொறுப்பாகும்" என்று பரோசோ முன்பு கூறியிருந்தார். எனவே, டெலிகிராம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஊழியர்கள் அந்நாட்டில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். இல்லையெனில், நாட்டில் அவர்களின் பணி சட்டப்படி தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் நம்புகிறார்.


எங்கள் பிரேசிலிய பதிவுத்தடமான t.me/tginfobr இல் போர்ச்சுகீஸ் மொழியில் மேலும் அறியவும்.

tecnoblog.net/noticias/2022/01/19/tse-cogita-banir-telegram-no-brasil-para-combater-fake-news-nas-eleicoes

#Brazil #thadai
Telegram Telegram Info Brasil Canal espelho de @tginfo. Chat para discussão: @tginfochatbr Tudo sobre o beta: @betainfobr Outros idiomas: @tginfoall Feedback anônimo: @infowritebot Contato: contato@tginfobr.com Website: br.tginfo.me Doar: br.tginfo.me/doar
Post #128 203
வெல்ட்: டெலிகிராம் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த ஜெர்மன் அதிகாரிகள் விரும்புகிறார்கள்

ஜேர்மனியின் மத்திய குற்றவியல் தொடர்பு முகமை (BKE) சட்டவிரோத உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தளதின் செயல்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை இறுக்குவதன் மூலம் டெலிகிராமின் மீது அழுத்தத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

"டெலிகிராம் மற்றும் சட்ட அமலாக்க முகமை போன்ற சார்புடைய மத்திய அதிகாரிகளுக்கு இடையே ஒத்துழைப்பை அடைவதே இதன் குறிக்கோள்" - டை வெல்ட்டின் கேள்விகளுக்கு பிகேஏ பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃப்ரேசர், ஜெர்மன் செய்தித்தாள் டைஸெயிட்க்கு (Die Zeit) அளித்த பேட்டியில், ஜெர்மனியில் டெலிகிராம் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை.
Post #127 184
டெலிகிராமின் DC5 சேவையகம் இணைப்புச் சிக்கல்களைத் தற்காலிகமாகக் கொண்டுள்ளது.
Post #126 201
ஐஓஎஸ்ஸுக்கான டெலிகிராம் 8.4.1 பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டது

— நீங்கள் ஒரு பதிலடி தந்த பிறகு வரும் அசைவூட்டத்தின் அளவு மற்றும் நீளம் குறைக்கப்பட்டது. விருப்பமாக, முழு அளவிலான அசைவூட்டத்தினை அனுபவிக்க, எந்த பதிலடியையும் தொட்டுப் பிடிக்கலாம்.
— வழிசெலுத்தல் பட்டியில் உள்ள அசைவூட்ட சின்னங்கள். நான்கு சின்னங்களில் ஒவ்வொன்றையும் சொடுக்கினால், நீங்கள் ஒரு அசைவூட்டத்தினைக் காணலாம்.
— தற்காலிக பிடித்தரவு சேமிப்பை துடைக்க மற்றும் உள்ளக குறியீட்டு எண் அமைப்பதற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட திரைகள்.
— புதிய தொடர்பு வரிசையாக்க பிரிவுக்கான இடைமுகம்.
Post #125 1.63K
சட்டவிதிகளோடு இணங்காவிட்டால் ஜெர்மனியில் டெலிகிராம் தடுக்கப்படலாம்

ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபெசர், அந்நாட்டின் சட்டவிதிகளின் தேவைகளுக்கு இணங்கத் தவறினால் டெலிகிராம் வேலையை முடக்குவது குறித்து எச்சரித்தார். சிக்கலைக் கையாள்வதற்கானப் பிற வழிகள் தோல்வியுற்றால், அத்தகைய நடவடிக்கை "கடைசி முயற்சியாக" எடுக்கப்படலாம். அதே நேரத்தில், ஜெர்மனி மட்டும் இந்நிலைமையைத் தீர்க்க வாய்ப்பில்லை, எனவே இந்த விஷயத்தில் ஐரோப்பிய கண்டம் தழுவிய முடிவு தேவை என்று ஃபெசர் குறிப்பிட்டார்.

ஜெர்மன் சட்டத்தை மீறியதற்காக டெலிகிராம் கோடிக் கணக்கான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜெர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் முன்பு கூறியது நினைவிருக்கலாம்.

டிசம்பர் இறுதியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி மரியா ஜாகரோவா, டெலிகிராம் தொடர்பான ஜெர்மன் அதிகாரிகளின் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
Post #124 154
டெலிகிராமிற்கு ரூபாய் ஒரு கோடி ($1,47,000) அபராதம் விதிக்கப்பட்டது

ரஷ்யவில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்ற மறுத்ததால், அபராதமாக மொத்தம் ரூபாய் ஒரு கோடி ($1,47,000) டெலிகிராமுக்கு விதிக்க புதிய வழக்குகள் துவங்கப்பட்டன.

ரஷ்ய அரசின் (FSSP) தரவு வங்கியின் படி, டிசம்பர் 20, 2021 தேதியிட்ட மாஸ்கோவின் டாகன்ஸ்கி நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக டெலிகிராம் நிறுவனத்திடமிருந்து $66,000, $27,000 மற்றும் $54,000 அபராதம் வசூலிக்க மூன்று அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அறிக்கையின்படி, 2021 டிசம்பர் மத்தியில், முந்தைய அபராத நிலுவைத் தொகையான ரூபாய் 1.5 கோடியை ($2,00,000) டெலிகிராம் முழுமையாக செலுத்தியுள்ளது.

#abaraatham
Post #123 136
@LivegramBot-இல் தரவுத்தள கசிவு

அண்மையில் ஒரு பிரபலமான பின்னூட்ட கூளி ஒரு தரவுத்தள கசிவைப் பற்றி தெரிவித்தது. பொதுவாக இக்கூளி டெலிகிராமின் பதிவுத்தட நிர்வாகிகளுக்கு அநாமதேய பின்னூட்ட கருத்தளிப்பு வழங்க பயன்படுத்தப்படுகிறது. கூளிகளைப் பாதுகாக்க, அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து கூளி அனுமதிப்புகளும் டெலிகிராம் குழுவால் திரும்பப்பெறப்படும்.

உங்கள் கூளி முன்பு போலவே செயல்பட, @BotFather மற்றும் @LivegramBot அமைப்புகளில் உள்ள அனைத்து லைவ்கிராம் கூளிகளுக்கான அனுமதிப்புகளை ஒவ்வொன்றாக புதுப்பிக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் கூளி விரைவில் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

கூளி உரிமையாளர்கள் செய்ய வேண்டியது:

1. @BotFather -ஐத் திறந்து, /mybots கட்டளையை அனுப்பவும்.

2. பட்டியலிலிருந்து உங்கள் கூளியைத் தெரிவுசெய்யவும்.

3. செயலி நிரல் இடைமுக (API) அனுமதிப்பைத் தட்டவும், பின்னர் தற்போதைய அனுமதிப்பைத் திரும்பப் பெறவும். அதன் பிறகு, புதிய அனுமதிப்பை @LivegramBot -க்கு அனுப்பவும்.
Post #122 128
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் மறுஉற்பத்தி சரிசெய்யப்பட்டது

நிரலுருவாக்குநர்களின் தவறுகளால், மறுஉற்பத்திக் கட்டமைப்பு உடைந்து, ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் சில அண்மை பதிப்புகள் அதிகாரப்பூர்வ மூலநிரல் குறியீட்டிலிருந்து தொகுக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க முடியவில்லை என்று முன்பு நாங்கள் தெரிவித்திருந்தோம்.

டெலிகிராமின் 8.4.3 பதிப்பு மறுஉற்பத்தியைச் சரிசெய்கிறது: Telegram.org மற்றும் கூகுள் ஆட்டத்திலிருந்து ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் நிறுவல் தொகுப்புகள் அதிகாரப்பூர்வ களஞ்சியத்தில் வெளியிடப்பட்ட மூலநிரல் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன என்பதை எங்களால் சரிபார்க்க முடிந்தது.

இதனால் டெலிகிராம் நிரலுருவாக்குநர்கள் மூலநிரல் குறியீட்டில் காணாத எந்த மறைக்கப்பட்ட செயல்பாடுகளையும் சேர்க்கவில்லை என உறுதிசெய்யப்பட்டது.
Older posts →
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →