சட்டவிதிகளோடு இணங்காவிட்டால் ஜெர்மனியில் டெலிகிராம் தடுக்கப்படலாம்
ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபெசர், அந்நாட்டின் சட்டவிதிகளின் தேவைகளுக்கு இணங்கத் தவறினால் டெலிகிராம் வேலையை முடக்குவது குறித்து எச்சரித்தார். சிக்கலைக் கையாள்வதற்கானப் பிற வழிகள் தோல்வியுற்றால், அத்தகைய நடவடிக்கை "கடைசி முயற்சியாக" எடுக்கப்படலாம். அதே நேரத்தில், ஜெர்மனி மட்டும் இந்நிலைமையைத் தீர்க்க வாய்ப்பில்லை, எனவே இந்த விஷயத்தில் ஐரோப்பிய கண்டம் தழுவிய முடிவு தேவை என்று ஃபெசர் குறிப்பிட்டார்.
ஜெர்மன் சட்டத்தை மீறியதற்காக டெலிகிராம் கோடிக் கணக்கான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜெர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் முன்பு கூறியது நினைவிருக்கலாம்.
டிசம்பர் இறுதியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி மரியா ஜாகரோவா, டெலிகிராம் தொடர்பான ஜெர்மன் அதிகாரிகளின் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
Post #125
1.63K